அன்புள்ள டாக்டர்
உங்கள் உதவி உடனடியாகத் தேவைப் படுகிறது. இரண்டு நாள் முன்பு வரை நன்றாக ஆரோக்கியமாக பேசி, சிரித்து, மூச்சு விட்டுக் கொண்டு, சாப்பிட்டுக் கொண்டிருந்த நண்பர் ஒருவர் நேற்று மாலையில் இருந்து ‘குப்பை குப்பை’ என்று ஜன்னி வந்த மாதிரி திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார். என்ன ஏது என்று பார்க்கப் போனவர்களையும் ‘உங்க வம்சமே குப்பை’ என்று வைது தீர்க்கிறார்.
முந்தாநாள் ஏதோ சினிமா பார்க்கப் போய் தவறுதலாக அடுத்த கட்டடத்தில் நுழைந்து வெறும் வெள்ளைச் சுண்ணாம்பு அடித்த சுவரையே ஒரு மணி நேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு எழுந்து வந்து இந்த ’குப்பை’ அர்ச்சனை நடத்த ஆரம்பித்ததாகச் சொல்கிறார்கள்.
ஜி.நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே’யில் ஒரு சிறுமி மனநிலை பாதிக்கப்பட்டு ‘டுபுக் டுபுக்’ என்று வாழ்க்கை முடியும் வரை சொல்ல விதிக்கப்பட்டவளாக உச்சரித்துக் கொண்டிருப்பதை சித்தரித்திருபார். வருத்தமும் சிரிப்பும் வரவழைக்கும் சூழல் அது.
இவர் கல்யாண வீட்டு க்ளோஸ்ட் சர்க்யூட் டிவியில் கூட தாலி கட்டும் நேரத்துக்கு முந்தி சம்பந்திச் சண்டை விவாதத்தில் தலை காட்டி உக்ரமாக உலகில் சகல நடப்புகளையும் பற்றி சர்ச்சை செய்து கொண்டிருந்ததால் ஏற்பட்டதாக இருக்கலாம் என்று தெரிகிறது.
என்னையும், உங்களையும் அவர் குப்பைக் கணக்கில் சேர்த்திருந்தாலும் பொருட்படுத்தாமல் வைத்தியம் பார்க்கவும். பில்லை எனக்கு அனுப்பி வைக்கவும். பணம் முன்னே பின்னே அனுப்பினாலும், அதை குப்பைத் தொட்டியில் போட மாட்டேன்.
அன்புடன்
—————————————-
நண்பர் ஞாநி விஜய டெண்டுல்கரின் ‘கமலா’வை திரும்ப (உச்சநீதி மன்றத் தீர்ப்பின் படி இனி நாடகங்களுக்கு காவல்துறை அனுமதி தேவையில்லை) நடத்தப் போவதாக அறிகிறேன். கோமலின் மகள் ‘தண்ணீர் தண்ணீரையும்’.
விஜய் டெண்டுல்கரின் ‘சகாராம் பைண்டர்’? நடத்த முடியாது என்பது வருத்ததுக்குரிய உண்மை.
————————————
பிரணாப் முகர்ஜி பூவா தலையா போட்டுப் பார்த்துத்தான் தூக்கு தண்டனை கருணை மனுக்களை ஏத்துக்கலாமா, நிராகரிக்கலாமான்னு தீர்மானிக்கிறாராம். தலை விழுந்தா நோ கருணை.
ரிசர்வ் பேங்கில் ஸ்பெஷலாக, ரெண்டு பக்கமும் நேரு தலை போட்ட காசு செஞ்சு அவர் கிட்டே கொடுத்திருக்காங்களாம்.
———————————–
விஸ்வரூபம் நாவலுக்கு பாசிட்டிவான விமர்சனம் எழுத்தாளர் நண்பர் சுப்ரபாரதிமணியனிடம் இருந்து வந்திருக்கிறது. திரைப்படம் விஸ்வரூபம் சூறாவளியில், நாவல் விஸ்வரூபத்தை ஓரமாக ஒதுக்கி வைத்திருக்க நேர்ந்தது. விஸ்வரூபம் வெற்றியைத் தொடர்ந்து, நாவல் promo தொடர்கிறது. Hello, publisher sir!
Autograph illamal vizwaroopam vangave matten
-surya