Ie.Paa sir, Twitterature, Jnanapoonkothai … and a walking stickஞானப் பூங்கோதையும் ட்விட்டர் ஹாம்லெட்டும், விழுத் தண்டும்

இ.பா சார் அபார்ட்மெண்டில் நுழைந்ததும் வரவேற்பவை – மிக நேர்த்தியாக, தூய்மையாக, வேண்டிய அளவு வெளிச்சத்தோடு ஒரு வரவேற்பரை, மென்மையான பேச்சும் பூவாகச் சிரிப்புமாக அவர் அளவளாவுவது, குறுகிய நேரம் பேசினாலும் இலக்கியம் தொடர்பாக ஏதாவது புதிய அறிதலும், புரிதலும். அப்புறம் வரவேற்பு அறை சிறு மேசையில் புத்தகங்கள். நேற்றுக் கண்ணில் பட்டவை சீனி.விசுவநாதனின் பாரதி தொகுப்பு (என்னிடம் அது இல்லை.. வரிசையில் நான்காவதாகவோ ஐந்தாவதாகவோ இருக்க வேண்டும்), ட்விட்டரேச்சர் – பெங்குவின் வெளியீடு ஆங்கிலப் புத்தகம்.

காது வலி சிகிச்சைக்காக மருத்துவரிடம் போய் அது கண் கண்ணாடியை மாற்றுவதில் முடிந்ததை அவரால் தான் சிறுகதை போல் சொல்ல முடியும். பளிச்சென்று குழந்தை போல் ஒரு சிரிப்பும் கூடவே மின்னி மறையும்.

என் புத்தகத்தைக் கொடுத்தேன். சிரித்தபடி வாங்கி முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்தார்.

’(இவ்வளவு பெரிசா?) எப்படி எழுதினீங்க’

‘எப்படியோ சார்.. ரெண்டரை வருஷம் ஆச்சு எழுதி முடிக்க..’.

’எடிட்டிங்க் எல்லாம் எப்படி? நீங்க ஒரு தடவை பார்த்தீங்களா?’

‘பார்த்தேன் சார்.. அச்சுக்குப் போறதுக்கு முந்தி அனுப்பியிருந்தாங்க, எடிட்டரோடு உரையாடல்கள்..’

‘என் நாவலை ரெண்டாம் பதிப்பு போடறபோது ஒரு பதிப்பகத்திலே அங்கங்கே பக்கங்களை முன்னும் பின்னுமா மாற்றிப் போட்டு புத்தகமும் வந்தாச்சு.. அது மொழிபெயர்ப்புக்கு தயாரான போது பத்மா நாராயணன் – மொழிபெயர்ப்பாளர் – கேட்டாங்க, என்ன சார், அங்கங்கே தொடர்ச்சி இல்லாமே இருக்கே… அப்போதான் நானே பார்த்தேன்..’

மறுபடியும் சிரிப்பு.

நான் ட்விட்டரேச்சர் புத்தகத்தின் மேல் அவ்வப்போது கள்ளக்கண் இட்டதைக் கவனிக்காமல் இல்லை அவர்.
புத்தகத்தை மெல்ல எடுத்துப் புரட்டினேன்.

’எடுத்துப் போய்ப் படிங்களேன்..’

சிரிப்பும் புத்தகமும் என்னிடம் இடம் மாறியது. விடை பெற்றேன்.

மொபைலில் நேரம் பார்த்தேன் – சரியாகப் பதினைந்து நிமிடம்.

————————————————————————-

நண்பர் நேசமிகு ராஜகுமாரனை என்ன செய்தால் தேவலை? ஒரு பொக்கிஷத்தைப் பதுக்கி வைத்திருக்கிறார். ‘ஞானப் பூங்கோதை’ என்ற பெயரில் அவர் 2006-ல் வெளியிட்ட அரிய புத்தகம் அது. உலக அரசியலில் கொந்தளிப்பு ஏற்பட்டிருந்த 1935 – 45 களில் பர்மாவுக்கு பெட்டியடி எழுத்தராக (வட்டிக் கடைக் கணக்கர்) வேலைக்குப் போன, நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் மும்முரமாகச் செயல்பட்ட தேசபக்தர் புதுப்பட்டி ஆறு.வீர.காசி.விசுவநாதன் செட்டியார் தன் மனைவி ஞானப் பூங்கோதை ஆச்சிக்கும், மற்ற நண்பர்கள், உறவினர்களுக்கும் எழுதிய கடிதங்களின் தொகுப்பு இந்தப் புத்தகம்.

வாசிக்கத் தொடங்கி இருக்கிறேன்.

சரித்திரம் விளிம்புநிலை, சாமானியர்களால் தான் ஆக்கப்படுகிறது என்பதை இன்னொரு முறை உரக்க நிரூபிக்கிறது இந்தப் புத்தகம்.

தியாகி பென்ஷன் வேண்டாம் என்று மறுத்துத் தொடர்ந்து சமூக சேவையில் ஈடுபட்டுநம்மிடையே இன்னும் வாழ்ந்து வரும், தொண்ணூறு வயதுத் தேசத் தொண்டர் இவர். திருப்பூர் கிருஷ்ணன் முன்னுரை சொல்வது போல், ‘இவர் மாபெரும் தலைவர் இல்லை. பல லட்சம் மக்களால் அறியப்பட்டவர் இல்லை. சராசரி மனிதர்’.

அவருடைய சிந்தனைப் போக்கும், எளிமையான, நேசத்தோடு பேசுகிற கடித நடையும் பிரமிக்க வைக்கின்றன.

நூலின் பின் இணைப்பாக, ‘பர்மா நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் சங்கம், 105, ஆர்மேனிய வீதி, சென்னை’ நவம்பர் 1945-ல் வெளியிட்ட ‘யுத்தகால பர்மா’ என்ற சிறு நூலும் அச்சானபடிக்கு அப்படியே இடம் பெறுகிறது. பழைய புத்தகத்தை ஒளிநகல் எடுத்து மாற்றி இணைத்திருக்கிறார் ராஜகுமாரன். காலத்தில் பின் நோக்கிப் பயணப்பட அந்தப் பழைய அச்செழுத்து நமக்கு விரைவான வாகனமாக அமையக் கூடும்.

நேசமிகு ராஜகுமாரன், இந்தப் புத்தகம் இன்னும் விரிவாக அறிமுகமாக வேண்டும் .

———————————————————–

தற்போது கனடா சுற்றுப் பயணத்தில் இருக்கும் நண்பர் ஓவியர் ஜீவா Jeeva Nanthan அங்கே முதியவர்களுக்காக ஓர் ஓவியப் பயிற்சி அரங்கு (workshop – பட்டறை?) நடத்தியதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

மனம் நிறைந்து போனது.

புறநானூறு சொன்ன ‘தொடித்தலை விழுத்துண்டு (walking stick) ஏந்திய காலத்தில் இனி வருமோ என்று ஏங்கிய இளமை திரும்ப வந்திருக்கிறது சிலருக்காவது..

வாழ்த்துகள் ஜீவா

புறநானூறு (243) (நன்றி – http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=175&pno=121

பழங்காலத்துப் புலவர் ஒருவர் ஆற்றோரமாகச்
சென்றபோது ஒரு மடுவின் கரையில் நின்று இளைஞர்கள்
விளையாடும் காட்சியைக் கண்டார். மடுவின் கரையில் இருந்த
மருத மரத்தின் கிளை ஒன்று நீர்ப் பக்கமாகச் சாய்ந்துகிடந்தது.
அந்தக் கிளையில் இளைஞர் ஏறி, ‘துடும்’ என்று நீரில் குதித்து,
ஆழ்ந்து முழுகி மணல் கொண்டு வந்து கரையில் உள்ளவர்க்குக்
காட்டி மகிழ்ந்தனர். அலை பிதிர்ந்து எழுமாறு அவர்கள் ஆழ்ந்த
நீரில் குதிக்கும் காட்சியைக் கண்டு கரையில் நிற்பவர் வியப்பு
உற்றனர். வஞ்சனை அறியாத அந்த இளைஞரின் ஆடலைப்
புலவரும் கண்டார். மற்றவர்களைப்போல் அவர் வியப்பு உற்று
நிற்கவில்லை. கற்பனைத் திறம் மிக்க அவருடைய நெஞ்சம்,
இளமைப் பருவத்தில் அவர் ஆடிய விளையாட்டுகளை
நினைவூட்டியது. புலவர் அப்போது முதுமை உற்றுக் கோல்
ஊன்றி இருமலும் உடையவராய் இருந்தார். தளர்ந்த அந்த
முதுமையோடு அவர், மடுவில் பாய்ந்த இளைஞரைக் கண்டதும்
தம் இளமைப் பருவத்தை நினைத்தார். தாமும் அவ்வாறு மறையும
்மாயமும் அறியாமல் நீரில் குதித்து மூழ்கி விளையாடிய நாட்களை
நினைந்தார். இளமகளிரோடு சேர்ந்து பாவை வைத்து விளையாடி
அவர்களோடு கை கோத்து ஆடி மகிழ்ந்த நாட்களையும்
நினைத்தார். அந்த இளமையின் துடிதுடிப்பான ஆட்டங்களைக்
கற்பனையால் நினைந்து பார்த்த பிறகு தம்முடைய தண்டு ஊன்றிய
முதுமையையும் எண்ணினார். அந்த இளமை எங்கே போயிற்றோ
என்று வருந்தினார்.

இனிநினைந்து இரக்கம் ஆகின்று திணிமணல்
செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத்
தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து
தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி
மறையெனல் அறியா மாயமில் ஆயமொடு
உயர்சினை மருதத்து உறையுறத் தாழ்ந்து
நீர்நணிப் படுகோடு ஏறிச் சீர்மிகக்
கரையவர் மருளத் திரையகம் பிதிர
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
குளித்துமணல் கொண்ட கல்லா இளமை
அளிதோ தானே யாண்டுண்டு கொல்லோ
தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று
இருமிடை மிடைந்த சிலசொல்
பெருமூ தாளரேம் ஆகிய எமக்கே.1

இது கழிந்து போன இறந்த காலத்தை நினைந்து இரங்கிய
இரக்கத்தால் ஏற்பட்ட கற்பனை. வாழ்விலிருந்து பின்னோக்கிச்
சென்ற கனவு என்று இதனைக் குறிப்பிடலாம். அந்த நிகழ்ச்சி,
புலவர் பாடிய அப்போது நிகழ்ந்தது அன்று; கல்லா
இளமையின்போது பல ஆண்டுகளுக்கு முன்னே நிகழ்ந்தது.
அதனை அவ்வாறே கற்பனை செய்த மனக் கண்ணின் திறத்தை
இங்குக் காணலாம்.

  • Ananthakrishnan Pakshirajan விழுத்தண்டிதனார்!
  • EraMurukan Ramasami Mr.Walking Stick! Nice name, right? The naming convention of our ancestors is a charming one, anna. When the name of a poet could not be ascertained, they named him or her with a key line of their creation – செம்புலப் பெயல் நீரார், குப்பைக் கோழியார் .. but they also did not hesitate to add the ‘physicallly challenged status’ a sa prefix to the name, like முடமோசியார், முடத்தாமக்கண்ணியார்..—-

——————————————————————————

நண்பர் க்ரேஸி மோகன் விஸ்வரூபம் நாவலைப் படித்து முடித்து அனுப்பிய ‘வியப்பு வெண்பா’

அசுவரத ஓட்டியா ஆருயிர்த் தோழன்!
விசுவரூபம் கண்டு விஜயன் – பிசுபிசுத்துப்
போனதுபோல் நண்பா பிரமித்து ஒடுங்கினேன்
நானுமது நாவலால் நீர்த்து.

(நானுமது – நான் உமது) நீர்த்து – ஆனந்தக் கண்ணீர்

—————————————————————————————

செல்போனோடு புதைக்கப்பட்டவனின்
சிமிண்ட் உலராக் கல்லறைக்குள்ளிருந்து
‘நான் பேச நினைப்பதெல்லாம்’
விளி இசையாய்
வெளியே விடச் சொல்லி அரற்றுகிறது
மொழி.
(இரா.மு)

விளி இசை – caller tone

சோமு Tirunelveli Kalapria கலாப்ரியாவின் மொழிக் கவிதை பாதிப்பில்… இரா.மு

———————————————————————————-

From the book ‘Tiwtterature’ – the world’s greatest books retold thru Twitter.

Can Mahabaratha be told in 20 tweets?

Hamlet by William Shakespeare
————————————

@OedipusGothplex
My royal father gone and nobody seems to care.

Mom says to stop wearing black.

STOP TRYING TO CONTROL ME. I won’t conform! I wish my skin would just … melt.

I’m too sad to notice that Ophelia’s so sexy and fine. And mother also looks rather fair despite all her struggles.

AN APPARITION! This shit just got HEAVY. Apparently people don’t accidentally fall on bottles of poison.

Why is Claudius telling me what to do again? YOU’RE NOT MY REAL DAD! In fact you killed my real dad. 🙁

2bornt2b? Can one tweet beyond the mortal coil?

I wrote a play. I hope everyone comes tonight! 7pm! Tickets are free w/ great sense of irony.

Uncle just confessed to Dad’s murder.

I had a knife to that fat asshole but bitched out. Now he’s alive and still taking to bed with that beautiful wo— … er, my mother.

Gonna try to talk some sense into Mom because boyfriend totally killed Dad. I sense this is the moment of truth, the moment of candour and –

WTF IS POLONIUS DOING BEHIND THE CURTAIN?

I just killed my girlfriend’s dad. Does this mean I can’t hit that?

Rosencrantz and Guildenstern are here, up to their shenanigans. YAWN.

Rosencrantz and Guildenstern are dead. Anyone miss them? Didn’t think so.

The gravedigger’s comic speech isn’t funny at all. It’s heavy and meaningful. Just send me YouTube vids instead, pls. I am so borrredddd.

Ophelia just pulled a Virginia Woolf. Funeral is on the morrow.

Laertes is unhappy that I killed his father and sister. What a drama queen! Oh well, fight this evening.

Anybody want a drink? Uh-oh. That went poorly.

@PeopleofDenmark: Don’t worry. Fortinbras will take care of thee. Peace.

One comment on “Ie.Paa sir, Twitterature, Jnanapoonkothai … and a walking stickஞானப் பூங்கோதையும் ட்விட்டர் ஹாம்லெட்டும், விழுத் தண்டும்
  1. எஸ்.ராஜகுமாரன் சொல்கிறார்:

    ஞானப்பூங்கோதை குறித்து எழுதியமைக்கு நன்றிகள் சார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன