Era.Murukan’s ‘Viswaroopam’ – Novel launchவிஸ்வரூபம் நாவல் வெளியீட்டு விழா – சென்னை 2 மார்ச் 2013


நேற்றைக்கு விஸ்வரூபம் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடந்தது. மூத்த தமிழ் இலக்கிய எழுத்தாளர், கவிஞர்களான இ.பா சார், வைதீஸ்வரன் சார் முதல் விழாவில் கலந்து கொண்ட என் அருமை நண்பர்கள், சுற்றம் எல்லோருக்கும் ஒவ்வொருவராக அழைத்து வார்த்தைப் பொன்னாடை போர்த்திக் கவுரவித்து நன்றி சொல்ல வேண்டும்.

எழுதுகிறேன்.

விழா தொடங்க ஐந்து நிமிடம் முன் தொலைபேசி வாழ்த்து தெரிவித்து, தவிர்க்க முடியாத காரணத்தால் வர முடியாததற்கு வருந்தி, விழா முடிந்த பிறகு ஞாபகமாக மறுபடி தொலைபேசி விவரம் விசாரித்து இன்னொரு முறை கலந்து கொள்ள முடியாமல் போனதற்காக வருத்தப்பட்ட இலக்கிய ஆர்வலரான என் அருமை நண்பருக்காக ஒரு நாற்காலி மேடையில் போட்டு வைத்திருக்கலாம் – K.H என்று இரண்டு எழுத்து மட்டும் எழுதிய சிறு பலகை சார்த்தி!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன