Yesterday’s The Hindu
More than the news item, I find the accompanying photograph interesting – of T.T.Srinivasa Raghavan, M.D, Sundaram Finance.
தண்ணி யடிசசு்ட்டு வந்தா தடாவாமே
அண்ணாச்சி பாக்கிவச்சார் ஆகாரம் மண்ணாச்சு
போய்யா அதுகிடக்கு பாயா கவிச்சிதுண்ண
நாயுடு மெஸ்படி ஏறு..
வாசல் எருமைங்க வால்தூக்கு தேவிலகு
ஏசாதே நீமெர்சல் ஆவாதே – ராசால்லே
ஓரமாய் ஆம்லெட்மேல் ஓடுதுபார் மாட்டுஈ
காரம்போர்ட் காய்கணக்கா சுண்டு.
ஈமூ கறி’பா எடுத்து ருசிபாரு
ஏமி முளிக்கறே ஏனத்தக் காமி
தயிர்வடை ஓணும்னு தம்பிவந்து நிக்கறான்
அய்ர்ர்வூட்டுப் புள்ள அனுப்பு.
(ஈமு Emu – நெருப்புக்கோழி வகை)
ஆரிய பவ்வான் அடச்சுத்தான் பூட்னானா
ஏரியா ஓட்டலுங்க எத்தினியோ ஏறினான்
வாம்மான்னு டூட்டியிலே வச்சாக்க கஷ்டமரை
மாமான்னு கூப்ட்றான் மணி.
அடுப்பைக் களுவியிடு அம்சமா பொட்டு
இடுப்பு வணங்கு இதுதான் வடுகாத்தா
சும்மாதான் எட்டியேன் பாக்கறான் லேதய்யா
அம்மாசை மெஸ்ஸு அடைப்பு.
கம்பூட்டர் வேலை கதைவிட்டே போகுதுபோ
சம்பாத்யம் பய்ஸ்கோப்பில் சல்லிசா அம்புடுமா
ஏசாம என்னபண்ண இந்தா’பா நாஷ்டாடீ
காசுபணம் தீஸ்கோனி ரா.
இங்கிலீஸ் போர்ட்வச்சா எஷ்ட்ரா வரியின்னு
தங்கவேல் சொன்னது தப்பாம்’பா – இங்கேயாப்
பாயிலா முட்டைரெண்டு பார்சல்செய் ஜல்திரா
தாயில்தார் சொன்னா சரி.
(இங்கேயாப் பாயிலா – இங்கே ஆஃப்பாயிலா; தாயில்தார் – தாசில்தார்)
ஒளுங்கா தினம்வந்த ஒய்ட்லக்கான் லாரி
தெலுங்கானா கேட்டதும் காயப் அலுங்காம
தெக்கே இருந்துமிப்போ கோழி வரத்தில்லே
லெக்பீசு கேட்டா ரவுசு.
நாயுடு மெஸ் – 9
எதுனாச்சும் துண்ண இருக்கா பசின்னாள்
மதுராம்பா சூலி மணிநைட் பதி’பா
பிசஞ்சு எடுத்த கறிமீன் பிடின்னேன்
ரசஞ்சோ றுதான்போ நமக்கு.
சூலி – கர்ப்பிணி; மணிநைட் பதி’பா – மணி ராத்திரி பத்து(தெலுங்கில் Padhi)
நாயுடு மெஸ் – 10
மெஸ்ஸிலே சாக்கடை ஓடாம அடச்சுக்கிட்டுதா, என்னாடா பண்லாம்னு யோசிச்சு நம்ம சொக்கன் இருக்கானே, ரா ரா ன்னு கூப்பிட்டு பார்க்கச் சொன்னேன். வேலையைக் கச்சிதமா முடிச்சுட்டான். துட்டு எம்புட்டு தரணும்டான்னு கேட்டா, காசு எதுக்கு முதலாளி, சுறாப்புட்டு கொடுன்னு கேக்கறாம்ப்பா
பிட்டுக்கு மண்சுமந்தது
சாக்கடை ஓடாமச் சால்வச்ச தண்ணியெல்லாம்
தேக்கினப்போ ராசொக்கா தெல்சான்னேன் – வந்தான்
’கறாராயி இம்புட்ன்னு காசொண்ணும் வேணாம்’
சுறாப்புட்டு கேக்கறான் ’பா
How many know he started his career in finance almost along with me in IOB, Defence Colony branch way back in 1981 as a Probationary Officer?
Appears I am still having starting trouble of some kind or other while he as almost completed the journey winning the trophy 😉 just joking..
http://www.thehindu.com/todays-paper/tp-sports/article3894966.ece